News December 10, 2025
தஞ்சாவூர்: வாட்ஸ்அப் வழியாக சேஸ் புக்கிங்!

தஞ்சை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
தஞ்சை மக்களே மறந்துடாதீங்க! – கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிறைவு செய்த படிவங்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
தஞ்சை: வீட்டின் கதவை உடைத்து திருடிய இருவர் கைது!

தஞ்சாவூரில் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 மடிக்கணினிகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போனது. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த சஞ்சய், விளார் சேர்ந்த மாணிக்கம் ஆகியோரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனர்.
News December 26, 2025
தஞ்சை: ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்!

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டியை சேர்ந்த பாண்டியன்(41) என்பவர், கடந்த 22ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து வீட்டிற்கு வந்து, கல்லணைக்கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தவறி விழுந்து மாயமானார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 23ம் தேதி காலை முதல் தேடி வருகின்றனர். இந்நிலையில் 4 நாட்கள் ஆகியும் பாண்டியன் நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.


