News December 10, 2025
திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் SC வரை சென்றுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 17, 2025
தேனியில் 2000 காலியிடங்கள்…கலெக்டர் அறிவிப்பு!

தேனி வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.19 ல் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 10 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2000 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு- 98948 89794, 7373529785. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
News December 17, 2025
ஆஸ்கரில் இந்திய திரைப்படம்!

ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படமான ‘ஹோம் பவுண்ட்’, சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதி பட்டியலில் (15 படங்கள்) இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில், நீரஜ் கய்வான் இயக்கிய இந்த படத்தில், இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த பட்டியலில் இருந்து, இறுதி நாமினேஷன் பட்டியல் ஜன.22-ல் அறிவிக்கப்படவுள்ளது.
News December 17, 2025
BREAKING: திமுக அதிரடி.. மாறுகிறாரா செந்தில் பாலாஜி?

2021 தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இம்முறை வேறு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் கரங்களை வலுப்படுத்த கோவை தெற்கில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியதால், அதை முறியடிப்பதற்காக திமுக இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


