News December 10, 2025

புதுவை கல்வித்துறையின் பணி மூப்பு பட்டியல் வெளியீடு

image

புதுவை கல்வித்துறையில் பணியாற்றி வரும் துணை முதல்வர்கள், ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியல், பதவி உயர்வுக்காக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2025 (இந்த ஆண்டு) வரை துணை முதல்வராக பணியில் சேர்ந்த 82 பேரின் பணி மூப்பு பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

Similar News

News March 15, 2026

புதுச்சேரி: 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி

image

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் (EVM) வேட்பாளர்களின் கலர் புகைப்படமும் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 15, 2026

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அட்டவணை

image

புதுச்சேரி 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23 ஆகும். மேலும், வேட்பு மனு பரிசீலனை மார்ச் 24ம் தேதி நடைபெறும் எனவும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

News March 15, 2026

BREAKING: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

image

புதுச்சேரியில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். ஒரே கட்டமாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அதனை தொடர்ந்து, மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!