News December 10, 2025

கூட்டணிக்கு EPS-தான் தலைவர்

image

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக EPS-ஐ அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் EPS-க்கு வழங்கப்படுகிறது எனவும், கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

பஸ் சேவைகள், ரயில் உணவுகளில் தட்டுப்பாடா?

image

பெட்ரோல், டீசல் & கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அரசு பஸ் சேவைகளில் பாதிப்பு, ரயில்களில் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், இவை வதந்தியே என்று TNSTC & IRCTC விளக்கம் அளித்துள்ளன. போதிய டீசல் இருப்பு உள்ளதால் பேருந்து சேவைகளில் பாதிப்பில்லை என்று TNSTC தெரிவித்துள்ளது. அதேபோல், வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களிலும் உணவு தடையின்றி வழங்கப்படுவதாக IRCTC கூறியுள்ளது.

News March 13, 2026

BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்.. இதுவே முதல்முறை

image

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஜெ.வீரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News March 13, 2026

பங்குச் சந்தையில் ₹23.44 லட்சம் கோடி சரிவு

image

மேற்காசிய போர் தொடங்கியதிலிருந்து BSE Sensex 5,252 புள்ளிகள் (6.46%) சரிந்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் BSE-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, ₹23.4 லட்சம் கோடி சரிந்து ₹4.40 லட்சம் கோடி ஆனது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று வெளியேறியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!