News December 10, 2025
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
திருப்பத்தூர் மாவட்டம் சாதனை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதூா், மேலூா், மேல்பட்டு, சோ்க்கானூா், ஜோன்றம்பள்ளி, தாதனவலசை, சின்ன சமுத்திரம், சின்ன பேராம்பட்டு, புள்ளூா், மோட்டூா், ரங்காபுரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த கிராமங்களில் புகையிலை விற்பனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு 5 காளான் வளர்ப்பு குடில்கள்!

திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை சார்பில், மலைவாழ் மக்களுக்காக ரூ.20 லட்சத்தில் 5 இடங்களில் காளான் வளர்ப்பு குடில்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக, திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மங்கலம் மலை கிராமத்தில் 2 காளான் குடில்களும், கொட்டையூரில் 2 காளான் குடில்களும், கோட்டூர் மலை கிராமத்தில் ஒரு குடிலும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
திருப்பத்தூரில் 24 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலா?

திருப்பத்தூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு, 2025-ல் மொத்தம் 735 அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லை குறித்து 24, குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்து 5, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பமாகியது குறித்து 56, குழந்தைகளின் புகைப்படத்தை மார்பிங் செய்தது குறித்து 5, குழந்தை திருமணம் தொடர்பாக 111 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.


