News December 10, 2025
திருவள்ளூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டரிடம் 270 மனுக்கள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 96, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 40, இதர துறைகள் சார்பாக 33 என மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News January 13, 2026
ஆவடி பள்ளியில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஆவடி விமானப்படை பள்ளியில் 18 பணியிடங்களுக்கு (ஆசிரியர், உதவியாளர், காவலர் போன்றவை) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: ஆசிரியர் பணிக்கு B.Ed/D.Ed, மற்றவருக்கு 10/12ஆம் வகுப்பு, வயது: 21-50. இதற்கு விண்ணப்பிக்க ஜன.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


