News December 10, 2025
அரியலூர்: சட்ட விரோத மது விற்பனை-ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இருவரும், அரசு மதுபான பாட்டில்களை வீட்டின் பின்புறம், சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
அரியலூர்: ரயில்வேயில் வேலை – தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <
News March 7, 2026
அரியலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

அரியலூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயணித்து வந்த கட்சிகளில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.


