News December 10, 2025
ஜான் சீனா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் & பேட் நியூஸ்!

WWE-ல் அதிக ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, அதில் இருந்து ஓய்வு பெற இன்னும் 4 நாள்களே உள்ளன. வரும் 13-ம் தேதி பாஸ்டனில் நடைபெறும் போட்டியே அவரது கடைசி போட்டியாகும். இதனால், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளார். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு WWE தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், அவரை Ring-ல் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே உள்ளது.
Similar News
News December 28, 2025
ஒரேநாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, TN-ல் நேற்று ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 4,741 பேர் மனு அளித்துள்ளனர். SIR-க்கு பிறகு 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பெயர்களை சேர்க்க 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
News December 28, 2025
மீண்டும் அணிக்கு திரும்பும் ஸ்ரேயஸ்

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த <<18347826>>ஸ்ரேயஸ்<<>>, மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பூரண குணமடைந்துவிட்டதாக BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வரும் ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நியூசி.,க்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
News December 28, 2025
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தில் நாளை(டிச.29) உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை 6 முதல் 8 மணி வரை வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது?


