News April 28, 2024
கன்னியாகுமரி அருகே விபத்து

அருமனையை சேர்ந்தவர் விஜித் (20). பிளம்பர். நேற்று மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திருவரம்பு சிஎஸ்ஐ சர்ச் அருகில் விஜித்தின் கட்டுபாட்டை இழந்து சர்ச் அருகில் இருந்த வீட்டு காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 4, 2025
குமரியில் 5394 பேர் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு 09.11.2025 நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 5394 பேருக்கு தேர்வு ஐந்து மையங்களில் 09.11.2025 காலை 10.00 மணி முதல் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
News November 4, 2025
குமரி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

குமரி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…
News November 4, 2025
குமரி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குளச்சல் புளிமூட்டுவிளையை சேர்ந்தவர் கொத்தனார் விக்னேஷ்(29). நேற்று(நவ.3) இவர் அம்மாண்டிவிளையில் உள்ள மனைவியின் வீட்டுக்குச்சென்று விட்டு பைக்கில் பரப்பற்று பகுதியில் வந்த போது முன்னால் சென்ற காரை முந்த முயன்றுள்ளார். அப்போது திடீரென எதிரில் வந்த லாரி பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


