News December 10, 2025
தமிழக பொறுப்பு டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெங்கட்ராமன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
கேன்சரை தடுக்கும் கொய்யா!

நமது ஊர்களில் எளிதாக கிடைப்பதால் கொய்யா பழத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனக்கூறும் டாக்டர்கள், அது கேன்சரையே தடுப்பதாக தெரிவித்துள்ளனர். *ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது *இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *நார்ச்சத்து வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது.
News December 13, 2025
மேகதாட்டு அணைக்கு எதிராக SC-ஐ நாடுவோம்: துரைமுருகன்

மேகதாட்டு அணை தொடர்பாக TN அரசு சார்பில் SC-ல் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். SC-ல் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள் முரணாக உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கர்நாடகாவின் முயற்சியை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 13, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹6,000 குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் நிலையில், வெள்ளி விலை 1 அவுன்ஸுக்கு $2.28 குறைந்து $61.96-க்கு விற்பனையாகிறது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<18544017>>நேற்று வரலாறு காணாத உச்சம்<<>> தொட்டிருந்த வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹6,000 சரிந்து ₹2,10,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ₹1 கிராம் ₹210-க்கு விற்பனையாகிறது.


