News December 9, 2025
டாப் 100-ல் 6 இந்திய நகரங்கள்

டேஸ்ட் அட்லஸின் 2025-26 ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 உணவு நகரங்களின் புதிய தரவரிசை வெளியாகி உள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவை என்னென்ன நகரங்கள், எந்த இடத்தில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. லிஸ்டில் இடம்பெற்றுள்ள சென்னையில், உங்களுக்கு பிடித்த உணவை கமெண்ட் பண்ணுங்க. SHARE.
Similar News
News April 3, 2026
பூத் ஏஜெண்ட் ஆக இருப்பேன்: அண்ணாமலை

சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், ஓட்டுப்பதிவு(ஏப்.23 ) நாளன்று முதல் ஆளாக வாக்கு செலுத்திவிட்டு, அதன்பிறகு ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பாஜக பூத் ஏஜெண்ட் ஆக பணியாற்றுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: வினைத்தூய்மை
▶குறள் எண்: 652
▶குறள்: என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
▶பொருள்: புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
News April 3, 2026
ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதில் மாற்றலாம்

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதாக மாற்றிக்கொள்ளும் வகையில் விதிகளை திருத்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச விமான நிலையங்களில் உள்ள அந்நிய செலாவணி கவுன்ட்டர்களில் இனி வெளிநாடு செல்லும் இந்தியர்களும் இந்திய ரூபாயை மாற்றி வெளிநாட்டு நாணயமாக மாற்றலாம். முன்னதாக, இந்தியாவில் வெளிநாட்டினருக்கு மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டு வந்தது.


