News December 9, 2025
கரூர்: கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், இன்று (09.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல் 2026 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட ஆய்வு பணிக்காக (FIRST LEVEL CHECKING) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 7, 2026
குளித்தலை அருகே விபத்து!

பில்லா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமலை (64). இவர் சம்பவத்தன்று தனது மகன் விஜய சுரேந்தர் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு அவருடன் குறப்பாளையம் சாலையில் சென்றபோது எதிரே ரவிக்குமார் ஓட்டி வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். வீரமலை புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 7, 2026
கரூர்: இரட்டை கொலை; அதிரடி தீர்ப்பு!

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வகணேசன் (50) – கல்பனா (42) தம்பதியினர். கடந்த 2024ம் ஆண்டு இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகனேசன் மனைவி கல்பனா, மகள் சாரதி பாலா (6) ஆகிய இருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பின் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கரூர் நீதிமன்ற நீதிபதி இரட்டை அயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
News March 7, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.6) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


