News December 9, 2025

செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

செங்கல்பட்டு மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 28, 2025

செங்கை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

செங்கை: வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து!

image

தஞ்சாவூரைச் சேர்ந்த ஜேசுதாஸ், தனது உறவினர்கள் 18 பேருடன் வேனில் சென்னைக்குச் சுற்றுலா வந்தபோது, வண்டலூர் அருகே வல்லாஞ்சேரியில் பின்னால லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் கவிழ்ந்து, ஓட்டுநர் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ட்ரைவரை தேடி வருகின்றனர்.

News December 28, 2025

செங்கல்பட்டு: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாப பலி!

image

பீர்க்கன்காரணையைச் சேர்ந்த சீதாராமன் (50), ஜி.எஸ்.டி சாலையில் மின்சார மோட்டார் சைக்கிளில் சென்றபோது, குறுக்கே வந்த பெண் மீது மோதாமல் இருக்க வண்டியைத் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கண்டக்டர் தப்பியோடினர்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!