News December 9, 2025
தமிழ் ஆட்சி மொழி தின கொண்டாட்டம்: ஆட்சியர் தகவல்

தமிழ் ஆட்சி மொழியாக சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியரகம் விடுத்த அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கணினி தமிழ், ஒருங்குறி பண்பாடு, ஆட்சி மொழி சட்ட அரசாணை, மொழிபெயர்ச்சி, கலைச்சொல்லாக்கம் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருவாரூர்: தமிழ் ஆசிரியருக்கு முதல்வர் விருது

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் ஆசிரியரும், நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளருமாகிய சண்முகசுந்தரம் ‘இயல் செல்வம்’ என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் இந்த இயல் செல்வம் விருது, முத்தமிழ் பேரவை சார்பில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி மூலம் வழங்கப்பட்டது. இதுமட்டும் அல்லாது, முதலமைச்சரிடம் இரண்டாவது முறையாக சண்முகசுந்தரம் விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.
News December 16, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பரிவாஹன் என்ற பெயரில் போலி APP லிங்குடன் போஸ்டர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படுவதை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்துவ தளங்களில் மட்டுமே e challan சரி பார்க்கவும், உண்மையான SMS TRAI அதிகரிக்கப்பட்ட தலைப்பு VAAHAN-G என்பதை நினைவில் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.


