News December 9, 2025
‘பாசிச திமுக’ அரசின் முயற்சி முறியடிக்கப்படும்: நயினார்

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்., கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணியின் MP-க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது எனக் கூறிய அவர், வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Similar News
News April 9, 2026
ஜெ.குரு பாமக திமுகவுக்கு ஆதரவு.. அன்புமணிக்கு ஷாக்!

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவுக்கு திடீரென ஆதரவளித்துள்ளது. அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்த குருவின் மகள் விருதாம்பிகை திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணியிடம் இருந்து தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், அவர் தனது தந்தைக்கு செய்த துரோகம் காரணமாக அங்குச் செல்ல மனமில்லை என கூறினார்.
News April 9, 2026
தேர்தலில் கவனம் ஈர்க்கும் PINK பூத்

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள 5 பிங்க் பூத்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த பூத்களில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள், போலீசார், உதவியாளர்கள் உள்பட அனைவருமே மகளிர்தான். வாக்குச்சாவடியின் நுழைவு முதல் வாக்காளர் அறை வரை பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பை ECI செய்துள்ளது.
News April 9, 2026
1 பேரலுக்கு 1 டாலர்.. ஈரானின் வசூல் வேட்டை!

ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை அனுமதிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு பேரலுக்கு ஒரு டாலர் என கிரிப்டோகரன்சி மூலம் கட்டணத்தை வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. 2 வார போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்கள் அனுப்புவதை தடுக்க, கப்பல்களை முழுமையாக சோதித்த பிறகே அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த கட்டணத்தால் இந்தியாவில் விலை வாசி உயருமா என கேள்வி எழுந்துள்ளது.


