News April 28, 2024
ரம்யா, ரஷ்மிகா மீது ரசிகர்கள் கோபம்

கர்நாடகாவில் நேற்று முன்தினம் 14 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் வாக்களித்தனர். இதனிடையே, நடிகைகள் ரம்யா, ரஷ்மிகா மந்தானா ஆகியோரும் வாக்களிக்க வருவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், அவர்கள் வாக்களிக்க வராத நிலையில், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை டேக் செய்து காரணத்தைக் கேட்டு வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
குறட்டை பிரச்னைக்கு இதுவே காரணமா?

சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பவர்கள் அதிகளவில் குறட்டை பாதிப்புக்கு ஆளாவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குறட்டையை தவிர வேறு உடல்நல பிரச்னை எதுவும் இல்லையெனில், வைட்டமின் டி பரிசோதனை செய்வது நல்லதாகும். ஏனென்றால், வைட்டமின் டி குறைபாடு காரணமாக மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு, சுவாசப் பாதை அடைத்து குறட்டை அதிகரிக்கலாம். இதற்கு 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தில் நடக்க அறிவுறுத்தப்படுகிறது.
News January 26, 2026
‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. நல்ல செய்தி வெளியானது

‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் வழக்கில் ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சாதகமான தீர்ப்பு வந்தால் படத்தை ரிலீஸ் செய்ய 3 தேதிகளை படக்குழு டிக் செய்துள்ளதாம். ஜன.30, பிப்ரவரி 6, பிப்ரவரி 13 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு படக்குழு தீவிரமாக வேலை செய்கிறதாம். இதில், பிப்.6-ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 26, 2026
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உணவுகள் டெலிவரியாகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<15493487>>மிக ஆபத்தானது<<>> என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமாம்.


