News December 9, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

2 நாள்களாக கனமழை இல்லாத நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதோடு, தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
Similar News
News March 20, 2026
தென்காசி: மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் நேற்று கனமழை பெய்துள்ளது. அப்போது விவசாயி வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் மேய்த்துக் கொண்டிருந்த அவரது பசு மாட்டின் மீது மின்னல் தாக்கியதில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த பசு மாட்டை வேலுச்சாமி கட்டி பிடித்து அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News March 20, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்

தவாக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. 4 நாள்களுக்கு முன்னர் திமுக தலைமைக்கு, வேல்முருகன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள், கூடுதல் சீட்டுகள் தொடர்பான <<19389138>>கோரிக்கைகளில்<<>> உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களை தனித்து களமிறக்க வேல்முருகன் முடிவு எடுத்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.


