News December 9, 2025

பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

பெரம்பலூர்: சொந்த ஊரில் வேலை வாய்ப்பு!

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய பூமாலை வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையம் (CMFC) அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பாளர் பணிக்குத் தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் டிச.31-க்குள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது குறித்த தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 25, 2025

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <>www.tabcedco<<>>.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். ஷேர்

News December 25, 2025

பெரம்பலூர்: நாளை இதனை மறக்காதிங்க

image

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (டிச.26), வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!