News December 9, 2025
நெல்லை: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
Similar News
News December 19, 2025
நெல்லை: ஜனவரி 2 வரை தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின்படி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று 19ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்படி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
நெல்லைக்கு முதலமைச்சர் வருகை.. முழு விவரம் இதோ…

நாளை (டிச.20) நெல்லை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இரவு 7 மணிக்கு திறந்து வைக்கிறார். டிச.21ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நெல்லை G.H மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
News December 19, 2025
நெல்லை – ஐதராபாத் நேரடி ரயில் இயக்கப்படுமா?

நெல்லை, குமரியில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு விரைவில் இயக்கப்படுகின்றன. ஆனால், ஐதராபாத்துக்கு நெல்லை, குமரியில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, நெல்லையிலிருந்து ஹைதராபாத்திற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்க தென்மத்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


