News December 9, 2025
கிருஷ்ணகிரி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 4, 2026
கிருஷ்ணகிரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News March 4, 2026
கிருஷ்ணகிரியில் அதிரடி காட்டிய ஆட்சியர்!

ஓசூரில் இராமநாயக்கன் ஏரி அருகே சுமார் 582 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேற்று (மார்ச்-3) ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News March 4, 2026
கிருஷ்ணகிரியில் தட்டி தூக்கிய பாஜக!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தெற்கு மண்டல தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர். ஆதிதொட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.


