News December 9, 2025
செங்கல்பட்டு: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
BREAKING: GST சாலையில் கோர விபத்து; இருவர் பலி

செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசுப் பேருந்துகளுக்கு இடையே பைக் ஒன்று சிக்கியதில் அதில் பயணித்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், GST சாலையில் அரை மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
News December 24, 2025
செங்கல்பட்டு: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


