News December 9, 2025

நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நுள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இதனை ஒட்டி திங்கள் சந்தை – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 18, 2025

குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

image

திருவனந்தபுரம் கல்லடச்சான்மூலை பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(69). இவர் கடந்த டிச.6.ம் தேதி பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு பைக்கில் சென்று விட்டு கொல்லங்கோடு வழியாக வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்திரன் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 

News December 18, 2025

குமரி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

முளகுமூடு கல்லுவிளை பெயிண்டர் லிபின். இவர் டிச.16.ம் தேதி குளச்சல் துறைமுகத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது  திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 18, 2025

குமரியில் 2,500 காலியிடங்கள்… கலெக்டர் அறிவிப்பு!

image

குமரி வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th,12th டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!