News December 9, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகிற 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
திருவாரூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News December 26, 2025
திருவாரூர்: டாஸ்மாக் பாரின் கதவை உடைத்து திருட்டு

கொரடாச்சேரி அருகே கமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (53). இவர் கமலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இவர் டிச.24 பார் கதவை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது பாரின் கதவு உடைக்கப்பட்டு, ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிசென்றதாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 26, 2025
திருவாரூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

திருவாரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து ‘<


