News April 28, 2024
சென்னை மக்களே உஷார்.. உடனே பாருங்க!

சென்னையில் வாகன ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளனர். அதாவது வாகன பதிவெண் பலகையில் தங்களின் பணியை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர்களை உடனே நீக்க மே மாதம் 1ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்துக்குள் வாகன பதிவெண் பலகையில் உள்ள ஸ்டிக்கரை நீக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துாரில் கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்தகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார்.
News November 27, 2025
சென்னை மக்களே ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

சென்னை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
சென்னை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


