News December 9, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
திருப்பூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
திருப்பூரில் அதிமுக பிரமுகர் பலி!

திருப்பூர், சந்திராபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(54). இவர் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் நேற்று இரவு திருப்பூர் ஊத்துக்குளி சாலை 2-வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வரபாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர், ஜி.என்.பாளையம், குன்னத்தூர், வேலம்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட குன்னத்தூர், குறிச்சி, தாளப்பதி, காவுத்தம்பாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


