News December 9, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.
Similar News
News December 16, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

தண்ணீர் சூடேற்றும் வாட்டர் ஹீட்டரை பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹீட்டரை இயக்கத்தில் வைத்துக் கொண்டு குளிக்க வேண்டாம். நீர் தேவையான வெப்பநிலையை அடைந்ததும் ஹீட்டரை அணைத்த பிறகு குளிப்பது பாதுகாப்பானது. இல்லையெனில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளது.
News December 16, 2025
ஈரோட்டில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், செல்வ விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சகானி (52), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக ஈரோட்டில் டைல்ஸ் வேலை செய்த அவர், நேற்று அதிகாலை அருகிலுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கை, கால் கழுவ முயன்ற போது விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்..

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் அருகே உள்ள மின்கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர் பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்களின் தங்களது நிறை,குறைகளை தெரிவிக்கலாம்,


