News December 8, 2025

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ.. தள்ளிப்போகும் திறப்பு விழா?

image

சென்னை, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், சில ரயில் நிலையங்களில் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு தாமதமாவதால், ஜனவரியில் மெட்ரோ திறக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 12, 2025

சென்னை: சிறுநீர் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

image

சென்னை பாரிமுனை பாலகிருஷ்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (45). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று இரவு பாலகிருஷ்ணா மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, ஆபிரகாம் உடல் இடது புறம் முழுதும் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News December 12, 2025

சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் இந்திய கடற்படை & மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு வருகிற டிசம்பர் 14ம் தேதியன்று அதிகாலை 3 மணியிலிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என CMRL அறிவிப்பு ஒன்றை நேற்று (டிச.11) வெளியிட்டுள்ளது. மேலும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!