News December 8, 2025

தென்காசி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

image

தென்காசி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

Similar News

News December 11, 2025

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்

image

ஏகே 47, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த விசாரணைக்குறித்து இன்று தென்காசி நகராட்சிக்குட்பட்ட ஆயிரப்பேரி செல்லும் சாலையில் உள்ள நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜரானார். எனவே நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

News December 11, 2025

தென்காசியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

தென்காசி மாவட்டத்தில் 2,274 வீடுகள் ஒதுக்கீடு

image

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 2025-26 நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் 739, கடையம் 192, கடையநல்லூர் 161, கீழப்பாவூர் 209, குருவிகுளம் 216, மேலநீலிதநல்லூர் 209, சங்கரன்கோவில் 170, வாசுதேவநல்லூர் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை 110 வீடுகள் என மொத்தம் ரூ.70.49 கோடியில் 2,274 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!