News April 28, 2024
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவா தீவின் கடற்கரையில், 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 70 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Similar News
News August 26, 2025
Health Tips: சாப்பிட்ட உடன் டீ காபி குடிக்கிறீர்களா? உஷார்!

சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் உடல்நலனில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். டீ, காபியில் இருக்கும் Tannic acid நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை உங்கள் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும். இதனால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி-ஐ தவிர்த்துவிடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News August 26, 2025
இனி 90% தங்க நகைக் கடன் கிடைக்கும்..!

<<17503903>>தங்க நகைகளுக்கு 90% கடன்<<>> வழங்குவதாக சவுத் இந்தியன் வங்கி அறிவித்தது. இதற்காக, SIB GOLD EXPRESS என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகள் அவகாசத்துடன் ₹25,000 முதல் ₹25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவணையாக இல்லாமல் இதனை எந்த நேரத்திலும் திருப்பி செலுத்தலாம். சிறு தொழில்முனைவோர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது. SHARE IT.
News August 26, 2025
பொது வினா விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17521026>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஆர்யபட்டா (1975)
2. ஆல்பர்ட் சபின்
3. பிரிட்டன்
4. பிங்க்- பாங்க் அல்லது டேபிள் டென்னிஸ் பால்
5. முதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர்
எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னீங்க!