News April 28, 2024
கடலூர்:விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வு

விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அளவிலான தேர்வு கடலூரில் நடைபெறுகிறது. இதில் மே மாதம் 10-ம் தேதி மாணவர்களுக்கும், 11-ம் தேதி மாணவிகளுக்கும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
கடலூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற<
News August 16, 2025
மங்கலம்பேட்டை: மது பாட்டில்கள் விற்றவர் கைது

மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் நேற்று எம்.பட்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (49) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News August 16, 2025
கடலூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <