News December 8, 2025
நீதி வென்றதாக நடிகர் திலீப் கண்ணீர்

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளதாக <<18502283>>வழக்கில் இருந்து விடுதலை<<>> செய்யப்பட்ட நடிகர் திலீப் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். எர்ணாகுளத்தில் பேசிய அவர், பொய்யான வழக்கால் சினிமாவில் தனது புகழ், நற்பெயரை சீர்குலைக்க நினைத்தவர்களின் எண்ணம் பொய்யாகிவிட்டது என்றார். மேலும், இந்த வழக்கிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு துணை நின்ற சினிமா, சட்ட நிபுணர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
Similar News
News April 3, 2026
கேஸ் சிலிண்டர்.. புதிய அறிவிப்பு வெளியானது

நாட்டில் வீட்டு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று இந்தியன் ஆயில் உறுதியளித்துள்ளது. தினமும் சுமார் 28 லட்சம் LPG சிலிண்டர்களை விநியோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்தும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பீதியடைந்து முன்பதிவு செய்வதையோ அல்லது வாங்கி பதுக்கி வைப்பதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.
News April 3, 2026
குழந்தைகளுக்கு இதை கொடுப்பதால் ஆபத்து!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட், பிரெட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை கொடுக்குறீங்களா? இதில் அதிக உப்பு, சர்க்கரை, Trans fat, Artificial colors இருப்பதால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே சுகர் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஃப்ரூட் சாலட், காய்கறி சாண்ட்விச், ஓட்ஸ் இட்லி, ராகி லட்டு, நட்ஸ் போன்ற சத்தான ஸ்நாக்ஸை அவர்களுக்கு கொடுங்கள். SHARE
News April 3, 2026
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்

தங்களது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் & எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குவைத் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்ததுடன், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல் சவுதி, பஹ்ரைன், UAE உள்ளிட்ட நாடுகளிலும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குவைத்தில் தாக்கப்பட்ட ஆலை, மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.


