News December 8, 2025

அமைச்சர் மீது CM நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை

image

அமைச்சர் நேரு மேலும் ₹1020 கோடி மோசடி செய்திருப்பதாக <<18501393>>ED கூறியிருப்பது<<>> அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவில் பல ஊழல்கள் நடந்திருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருப்பதாக கூறிய அவர், இந்த ஆட்சியில் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் துறைகளே சிறப்பாக செயல்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மினிஸ்டர் மீது CM உடனடியாக FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 10, 2025

தமிழகத்தின் ‘டாப் 7’ அமானுஷ்ய இடங்கள்!

image

மனிதனை எப்போதும் பயமுறுத்தும் விஷயம் பேய். அல்லுவிட்டாலும், பேய் படத்தை பார்ப்பவர்கள் விரும்புபவர்கள், வாழ்க்கையில் அந்த அமானுஷ்ய அனுபவத்தை பெற யாரும் விரும்புவதில்லை. ஆனால், தமிழகத்தின் இந்த இடங்களுக்கு சென்றால், நீங்கள் பேய் அனுபவத்தை பெறலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். அவை எந்தெந்த இடங்கள் என அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். உங்களுக்கு பேய் அனுபவம் இருக்கா?

News December 10, 2025

விஜய் கட்சியில் இணைகிறாரா அதிமுக EX அமைச்சர்? (PHOTO)

image

அதிமுக EX அமைச்சர்கள் சிலரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். <<18518514>>ஒரு சிலரது பெயர்கள்<<>> அடிபட்ட போதிலும், யார் யார் என்ற விபரம் சஸ்பென்ஸாகவே உள்ளது. இந்நிலையில், EX அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தவெக முக்கிய நிர்வாகியான ராஜ்மோகன் இருவரும் சந்தித்த PHOTO வெளியாகியுள்ளது. அதிமுகவில் தற்போது சைலண்ட் மோடில் இருக்கும் பாண்டியராஜன் தவெகவில் இணைய உள்ளாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

News December 10, 2025

PM மோடியை எப்போது சந்திக்கிறார் மெஸ்ஸி?

image

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 3 நாள் பயணமாக டிச.13 அன்று கொல்கத்தா வருகிறார். தனது சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின், மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்துக்கு செல்கிறார். அங்கு, இரவு 7 மணிக்கு நடக்கும் நட்பு போட்டியில் பங்கேற்கிறார். இதனையடுத்து 2-வது நாள் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோவில் பங்கேற்கவுள்ளார். இறுதியாக டிச.15 டெல்லிக்கு சென்று PM மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார்.

error: Content is protected !!