News April 28, 2024
மூவுலகரசி அம்மன் அலங்கார திருவீதி உலா

உதகை காந்தல் அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் நேற்று ( 27 தேதி ) மலையாள சமூகத்தார் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . அதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மூவுலகரசி அம்மன் அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி வழியாக முக்கோணம் சென்று மீண்டும் இரவு 10 மணியளவில் கோயிலை வந்தடைந்தது.
Similar News
News January 13, 2026
நீலகிரி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
News January 13, 2026
குன்னூரில் வெளுத்த மழை

குன்னூர் டானிங்டன் பிரிட்ஜ் சாலை, அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்குள்ள வீட்டின் மதில் சுவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், அப்பகுதியில் விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
நீலகிரி: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)


