News December 8, 2025
அரியலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News December 10, 2025
அரியலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.
News December 10, 2025
அரியலூர்: சட்ட விரோத மது விற்பனை-ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இருவரும், அரசு மதுபான பாட்டில்களை வீட்டின் பின்புறம், சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 10, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில், குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும், தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.09) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும்.


