News April 28, 2024
விடுதலை 2ஆம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும்

விடுதலை படத்தின் 2ஆம் பாகம் சிறப்பாக வந்துள்ளதாக நடிகர் சூரி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2ஆம் பாகத்தில் ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும், முதல் பாகத்தைக் காட்டிலும் 2ஆம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அவர் உறுதியளித்தார்.
Similar News
News November 14, 2025
நகை கடன்… முக்கிய அறிவிப்பு

வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. கடனை திருப்பி செலுத்தவில்லை எனில் நகைகளை வங்கிகள் ஏலம் விடலாம். ஆனால், ஏல விவரங்களை தாய் மொழியில் உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஏலம் நடந்தால், உபரித் தொகை 7 நாள்களுக்குள் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கடனை முறையாக செலுத்திவிட்டால், நகைகளை 7 நாள்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். SHARE IT
News November 14, 2025
ஜெயலலிதா வாட்ச் கலெக்ஷன் PHOTOS

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வலிமையான, தைரியமான பெண் அரசியல் தலைவர்களில் ஒருவர். தலைமை பண்பில் சிறந்து விளங்கியவர், வாட்ச் பிரியராகவும் இருந்துள்ளார். அவரிடம் ஏராளமான வாட்ச் கலெக்ஷன் இருந்துள்ளது. அதில், அவர் அணிந்திருந்த சில பிரபல வாட்ச்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 14, 2025
அடுத்தடுத்து ஹிட் அடிப்பாரா சிவகார்த்திகேயன்?

‘SK24′ பட ஷூட்டிங் டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தில், ‘பராசக்தி’-க்கு (SK25) பிறகு ஸ்ரீலீலா, SK உடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் பக்கா கமர்ஷியலாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கும் ‘SK26′ படத்தின் கதையும் சிவாவுக்கு நன்றாக அமையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


