News December 8, 2025
விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
விருதுநகர்: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

விருதுநகர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
விருதுநகர்: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News December 10, 2025
விருதுநகர்: கப்பலில் வேலை.. 4.5 லட்ச ரூபாய் மோசடி

சாத்துாரை சேர்ந்தவர் ஜெயவீரன் மகன் கவி விஷ்ணு. இவர் நெல்லை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற போது, அவரது ஆசிரியர் டென்சிங் டேனியல் (45), மனைவி ஷர்மிளா (32) ஆகியோர் கவி விஷ்ணுக்கு சிங்கப்பூர் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதனை அடுத்து, ஆசிரியர் உட்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


