News December 8, 2025
திருவள்ளூர்: தூக்கில் தொங்கிய வாலிபர் சடலம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சந்துரு(26) திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முந்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த சக்திவேலைக் கண்ட அவரது வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 13, 2025
திருவள்ளூர்: ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை!

ஆரம்பாக்கம் அடுத்த தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன்(17) ஆரம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் பூவரசன், நேற்று(டிச.12) வழக்கம் போல் வீட்டிற்கு செல்லாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரயிலில் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
News December 13, 2025
திருவள்ளூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.(SHARE)
News December 13, 2025
திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


