News December 8, 2025

மயிலாடுதுறை: 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

image

செம்பனார்கோவிலை சேர்ந்தவர் குமார் (50). இவர் வீட்டில் அரசால் தடை செய்யபட்ட குட்கா மற்றும் வெடி பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட 78.5 குட்கா பொருட்கள் & வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்

Similar News

News March 3, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

மயிலாடுதுறை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 3, 2026

மயிலாடுதுறை: +2 தேர்வில் 177 பேர் ஆப்சென்ட்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் +2 அரசு பொது தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 4847 மாணவர்கள் 5662 மாணவிகள் என மொத்தம் 10,509 மாணவ, மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் 177 பேர் தேர்வு எழுத வரவில்லை. 10 பறக்கும் படைகள் 38 நிலையான படைகள் 13 வழிதட அலுவலர்கள் 41 முதன்மை கண்காணிப்பாளர்கள் 41 துறை அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!