News April 28, 2024

IPL: ஆட்டநாயகன் விருது வென்ற மெக்கர்க்

image

மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் மெக்கர்க் ஆட்டநாயகன் வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six என விளாசி வாண வேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இதுவரை 5 போட்டிகளில் களமிறங்கிய அவர், 55, 20, 65, 23, 84 ரன்கள் குவித்து டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

Similar News

News February 5, 2026

கோவை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)

News February 5, 2026

TN அரசில் வேலை.. ₹58,000 சம்பளம்!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 999 Nursing Assistant Grade II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு & Nursing Assistant பயிற்சி ➤18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் ➤சம்பளம்: ₹15,700- ₹58,100 ➤தேர்ச்சி முறை: மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு ➤பிப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT.

News February 5, 2026

அரசியலில் இருந்து விலகலா.. அண்ணாமலை தெரிவித்தார்

image

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, அரசியலிலிருந்தே விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் ஒருபோதும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்துள்ளார். தேர்தல் பணி விலகலுக்கு தந்தையைக் கவனிக்க என காரணம் கூறினாலும், 6 தொகுதிகளுக்குள் அவரை அடக்கியதும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறுமா என்ற சந்தேகமும் தான் விலகலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!