News December 8, 2025
INTERNET வேண்டாம்.. மொபைல் மூலம் பணம் அனுப்பலாம்

இனி இண்டெர்நெட் இல்லாமலும் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம் என NPCI தெரிவித்துள்ளது. உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து, ‘*99#’ என்பதற்கு டயல் செய்யவும். கேட்கும் விவரங்களை அடுத்தடுத்து உள்ளீடு செய்து, அக்கவுண்ட்டை ஆஃப்லைனில் பதிவுசெய்ய வேண்டும். பின், மீண்டும் ‘*99#’ என்பதற்கு டயல் செய்து, தேவைப்படும் நபருக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ₹5,000 வரை அனுப்பலாம்.
Similar News
News March 6, 2026
OPS மாற்றினார்.. திமுகவில் பரபரப்பு

திமுகவில் பிற கட்சியினர் இணையும் விழாவை, OPS தன் சொந்த மாவட்டமான தேனியில் நடத்தாமல் மதுரையில் நடத்துவது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேனியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் ஐக்கியமாவதால், அங்கு கூட்டத்தை கூட்ட முடியாது என OPS நினைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை என்றால் அங்குள்ள PTR பழனிவேல், மூர்த்தி ஆகியோரை கூட்டத்தை கூட்டிவிடுவர் என கணக்கு போட்டுள்ளாராம்.
News March 6, 2026
ராமதாஸுக்கு மீண்டும் பின்னடைவு

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளரான ப.சுவாமிநாதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாக இந்த வேட்பாளரை ராமதாஸ் களமிறக்கினார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் ராமதாஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
News March 6, 2026
சற்றுமுன்: ரூ.2,500 பணம்.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல்வேறு புதிய சம்பள விவர அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நியாயவிலைக் கடை படி, ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விற்பனையாளர்களுக்கு ₹1,500, ₹1,750, ₹2,000 என்ற வகையிலும், கட்டுநர்களுக்கு ₹1,000, ₹1,250, ₹1,500 என்றும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான பயணப்படி தற்போதுள்ளவாறு ₹2,500 ஆகவே வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


