News April 27, 2024
அழகர் கோவிலை வந்தடைந்தார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி அழகர் கோவிலிலிருந்து மதுரை சென்ற கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு இன்று கோவிலை வந்தடைந்தார். ஏப்ரல் 23 அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் 26ஆம் தேதி தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மலைக்குத் திரும்பினார். இன்று பகல் 12:30 மணிக்குக் கோவிலை அடைந்த அழகருக்கு பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
Similar News
News November 14, 2025
BREAKING: தெ.ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 7 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் மார்க்ரம், ரிக்கெல்டன் ஆகியோர் பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நடுவரிசை வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த குல்தீப் யாதவ், முல்டர் மற்றும் கேப்டன் பவுமாவை ஆட்டம் இழக்க செய்தார். தற்போது 147-7 என்ற நிலையில் தெ.ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
News November 14, 2025
பிஹாரில் குவிந்த அதிமுகவினர்

பிஹார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு கோவை அதிமுகவினர் சென்றுள்ளனர். பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றி உறுதியாகி இருப்பது போல, 2026-ல் தமிழ்நாட்டிலும் அதிமுக தலைமையிலான NDA ஆட்சியமைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணி 190 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
ECI மீதான குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை: EPS

பிஹார் தேர்தல் வெற்றிக்கு, PM மோடி, அமித்ஷா மற்றும் நிதிஷ்குமாருக்கும் EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கூட்டணியின் போலி பிரசாரங்களை பிஹார் மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ECI மீதான இண்டியா கூட்டணியின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை என தெரிவித்த அவர், NDA-வின் கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


