News December 7, 2025

சேலம்: திருமண வாழ்வில் சோகம்!

image

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி காந்திமதி (28), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், காந்திமதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் காந்திமதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News December 10, 2025

சேலத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி!

image

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் நீலகண்டன் என்பவரது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என சேலத்தை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சிலரிடம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று தலைமறைவு ஆகினர். இந்நிலையில் பணமோசடி செய்த சந்திரேசேகர், நீலகண்டன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

News December 10, 2025

சேலம் அருகே சோகம்: பெண் விபரீத முடிவு

image

சேலம் பெரிய கவுண்டபுரத்தை சேர்ந்த பிரவீன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு சௌந்தர்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

News December 10, 2025

ஓமலூர்: பெண்களை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!

image

ஓமலூர் அடுத்த பச்சினம்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வேலைக்கு செல்லாமல் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக புகார் வந்த நிலையில் ஓமலூர் காவல்துறையினர் அவரை கண்காணித்து வந்தனர் நேற்று முன்தினம் இரவு தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்பொழுது அவரை பிடித்து கைது செய்தனர்.

error: Content is protected !!