News December 7, 2025
மீண்டும் NDA கூட்டணியில் அமமுகவா? டிடிவி பதில்

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்று டெல்லி பாஜகவினர் மத்தியஸ்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என டிடிவி தெரிவித்துள்ளார். இந்த கருத்து மூலம் மீண்டும் NDA கூட்டணியில் டிடிவி இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பொறுத்திருந்து பாருங்கள், தேர்தலுக்குள் பல மாற்றங்கள் நடக்கும் என்றார்.
Similar News
News April 3, 2026
இந்தி கற்று EPS கவர்னர் ஆகிவிடுவார்: கனிமொழி

தேர்தலுக்கு பின் இந்தி கற்றுக்கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக EPS சென்றுவிடுவார் என கனிமொழி விமர்சித்துள்ளார். எந்த மாநிலம் பிடித்திருக்கிறது என தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள் என EPS-க்கு கூறிய அவர், நிச்சயம் கவர்னர் வாய்ப்பை அமித்ஷா தருவார் என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜவுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பது அதிமுகவுக்கு தெரியவில்லை எனவும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
ரீல்ஸ் பார்ப்பதால் BP எகிறும்.. மக்களே உஷார்!

இரவில் தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் உடையவரா? சீனாவில் 4,318 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்ப்பது பதற்றம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பார்க்கும் ரீல்ஸின் அடிப்படையில் இளைஞர்களுக்கு உளவியல் பாதிப்பு உண்டாவதாகவும், அத்துடன் தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது. இனிமே கொஞ்சம் கவனமா இருங்க.
News April 3, 2026
பாஜக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

நாகை-காந்தி, ராதாபுரம்-பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்-அனந்தன் அய்யாசாமி, ஆவடி-ராஜசிம்மா, உதகை-போஜ ராஜன், திருப்பூர் தெற்கு-தங்கராஜ், திருவாரூர்-கோவி சந்துரு, கந்தர்வகோட்டை-உதயகுமார், தஞ்சை-கருப்பு முருகானந்தம், பத்மநாபபுரம்-ரமேஷ், குளச்சல்-சிவக்குமார், தளி-நாகேஷ் குமார், புதுக்கோட்டை-ராமசந்திரன், அறந்தாங்கி-கவிதா, திருப்பத்தூர்-திருமாறன், ராமநாதபுரம்- நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


