News April 27, 2024
திருப்பத்தூர்: ரூ.16 கோடி செலவில் நவீனம்

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.
Similar News
News April 20, 2025
திருப்பத்தூரின் பத்து திருத்தலங்கள்

இந்த 10 திருத்தலங்கள் இருப்பதால் திருப்பத்தூர் என பெயர் வந்தது
▶அங்கநாதீஸ்வரர் கோயில் – மடவாளம்
▶சோமசுந்தரேஸ்வரர் கோயில் – புத்தகரம்
▶பீமேஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்
▶ஜலகண்டேஸ்வரர் கோயில் – ஆதியூர்
▶காளகேஸ்தேஸ்வரர் கோயில் – கொரட்டி
▶பெருவுடையார் கோயில் – பெரியகரம்
▶ஜீரகேஸ்வரர் கோயில் – பாரண்டபள்ளி
▶சோமேசுவரர் கோயில் – அனேரி
▶அதிதீசுவரர் கோயில் – வாணியம்பாடி
▶சந்திரமௌலிஷ்வரர் ஆலயம் – பிச்சனூர்
News April 19, 2025
திருப்பத்தூர்: வெயில்த் தாங்க முடியலையா…? இங்க போங்க

திருப்பத்தூரில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிகள், இந்த இயற்கை அதிசயமானது 50 அடி உயரத்திலிருந்து கீழே விழும் நீரின் மூச்சடைக்கக்கூடிய அடுக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பசுமையான காடுகள், மலைகளிலுள்ள பறவைகளின் இனிமையான இசையால் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆச்சிரியம் தரும். கோடைகாலத்தில் குளிர்ச்சியான இடத்திற்கு போக நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 19, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.