News April 27, 2024
கள்ளக்குறிச்சி: தங்க மழை சிறுசேமிப்பு திட்டம் மோசடி

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுஜாதா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தங்க மழை சிறுசேமிப்பு திட்டம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சுஜாதா ஆகிய இருவரும் ஏஜெண்டுகள் மூலமாக ரூ.50 லட்சத்துக்கு மேல் நிதி மோசடி செய்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போலீசார் பன்னீர்செல்வத்தையும் அவரது மனைவி சுஜாதாவையும் இன்று கைது செய்தனர்.
Similar News
News February 19, 2026
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 61 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பொறியாளர்கள் துறையில் மேற் பார்வையாளர்களாக பணியாற்றி வரும் 23 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
News February 19, 2026
கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் செந்தில்(43). இவருக்கு கண்மணி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். செந்தில், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால், மனைவி பிரிந்து சென்றார். இந்த வேதனையில் செந்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News February 19, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி நடவடிக்கை!

பம்புதோட்டத்தில் சிறுவாங்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில், 6 கிளைகளில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளர் கதிரவன், ரூ.70 லட்சத்திற்கு மேல் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த தகுந்த ஆவணங்களை ஆய்வு செய்த ஆட்சியர், கதிரவனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்ய விழுப்புரம் துணைப் பத்விவாளருக்கு உத்தரவிட்டார்.


