News December 7, 2025
தருமபுரி: பைக்கில் வந்து ஆடு திருடிய 3 பேருக்கு வலை!

அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் தர்மலிங்கத்தின் மனைவி பாரதி வெளியே வந்து பார்த்தபோது 3 பேர் மாட்டு கொட்டகையில் இருந்த 3 ஆடுகளை திருடிக்கொண்டு டூவீலரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது, அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
தருமபுரி: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரியில் வெறிநாய் கடித்து 3 பேர் படுகாயம்!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, காமராஜர் நகரில், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களை வெறிநாய் கடுத்தாதால் அப்பகுதியியல் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிலர் தப்பித்து ஓடினர். இருப்பினும் பட்டு கோனாம்பட்டியை சேர்ந்த ரகு(40) அண்ணா நகர் பழனி (60) மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட, 5 பேர் வெறிநாய் கடித்து காயமடைந்தனர். பின், அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.