News December 7, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 5, 2026
RCB உடனான மோசமான சாதனையை தகர்க்குமா CSK?

5 முறை டைட்டில் வின்னர் என்ற பெருமையை கொண்ட CSK, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பறித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், RCB உடனான 3 முந்தைய போட்டிகளில் CSK தோல்வியுற்ற நிலையில், இன்று மீண்டும் மோதுகிறது. எனவே, இந்த மோசமான சாதனையை சென்னை அணி தகர்த்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 5, 2026
எழுந்தே நடக்க முடியாதவர் MLA? இபிஎஸ்

துரைமுருகனுக்கு 87 வயதாகும் நிலையிலும், காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளராக 13-வது முறையாக களம் காண்கிறார். இந்நிலையில், அவரை EPS விமர்சித்துள்ளார். ஒரு MLA என்றால் தொகுதி முழுவதும் சுற்றிச்சுழன்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஆனால் துரைமுருகனால் அது முடியுமா?; அவரால் எழுந்து நடக்கவே முடியாத சூழலில் எப்படி ஒரு MLA-வாக சிறப்பாக செயல்பட முடியும் என சாடினார். <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
இந்த வாரம் தங்கம் ₹2,320, வெள்ளி விலை ₹5,000 மாறியது!

தங்கம், வெள்ளி இரண்டுமே இந்த வாரம் ஏறுமுகத்திலேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. தங்கம் கடந்த வார இறுதியில் ஒரு சவரன் ₹1,09,280-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ₹2,320 உயர்ந்து ₹1,11,600 ஆக உள்ளது. அதேபோல், மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெள்ளி கடந்த வாரம் ₹2,50,000-க்கு விற்பனையான நிலையில், ₹5,000 உயர்ந்து தற்போது ₹2,55,000 ஆக உள்ளது.


