News December 7, 2025
ஷேக் ஹசினா எத்தனை நாள் இந்தியாவில் இருப்பார்?

ஷேக் ஹசினா விரும்பும் வரை இந்தியாவில் இருக்கலாம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளார். அந்த காரணங்கள் சரியாகும் வரை இங்கு இருப்பது அல்லது திரும்பி செல்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதேவேளையில், வங்கதேசத்தின் ஜனநாயக அரசியல் செயல்முறைகளை இந்தியா ஆதரிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2026
ஏன் சேட்டா.. புலம்பும் ரசிகர்கள்!

சஞ்சு CSK-வுக்கு வருகிறார் என்றதுமே ரன் வேட்டை நிகழ்த்துவார் என சென்னை ரசிகர்கள் கனவில் மிதந்தனர். ஆனால், அந்த கனவுகளை முதல் 3 மேட்ச்சுகளிலேயே கேள்விக்குறியாக்கி விட்டார் சஞ்சு. விளையாடிய ஒரு போட்டியில் கூட அவர் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. CSK-வை சாம்பியனாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டவர், ஒரு மேட்ச்சாவது ஒழுங்காக விளையாடுவாரா என்ற ஏக்கத்திற்கு ரசிகர்கள் சென்றுவிட்டனர். ஏன் சேட்டா?
News April 6, 2026
விஜய்யின் பிரசாரம் ரத்து

சென்னையில் விஜய் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தவெக தரப்பில் கேட்கப்பட்ட நேரத்தில் போலீஸ் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக TN தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே விஜய்யின் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என தவெக சார்பில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
எது ₹29,53,00,00,00,00-யா!

டிஜிட்டல் இந்தியாவில் UPI பரிவர்த்தனை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. மார்ச் 2026-ல் 2,264 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ₹29.53 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. UPI-ல் இதுவரை நடந்தவற்றில் இதுவே அதிகபட்ச பரிவர்த்தனை. தினசரி சராசரியாக சுமார் 73 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது மார்ச் 2025-ல் பதிவான ₹24.77 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 19% அதிகமாகும்.


