News December 7, 2025

ICU-வில் INDIA கூட்டணி: உமர் அப்துல்லா

image

உட்பூசல்கள், பாஜகவின் தொடர் வெற்றிகளால் INDIA கூட்டணி ICU-ல் இருப்பதாக J&K CM உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது, பிஹார் போன்ற தோல்வி முடிவுகள் மீண்டும் ICU-விற்கு அனுப்பிவிடுகிறது. நிதிஷ்குமாரை NDA கைகளில் சேர்த்தது, ஹேமந்த் சோரன் கட்சியை தொகுதி பங்கீட்டில் இருந்து விலக்கியது, பிஹாரில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News December 18, 2025

ஜன.5-ல் அமமுக பொதுக்குழு

image

தஞ்சாவூரில் ஜன.5-ல் அமமுக செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று டிடிவி அறிவித்துள்ளார். C.கோபால் தலைமையில் நடைபெறவிருக்கும் இப்பொதுக்குழுவில் அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இப்பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

News December 18, 2025

NOTAM என்றால் என்னன்னு தெரியுமா?

image

வங்கக்கடலில் <<18600837>>இந்தியா NOTAM<<>> அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NOTAM என்றால் Notice to Airmen. அதாவது, குறிப்பிட்ட வான்வெளி பகுதியில் சிவில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்படும் தடை. இதன் மூலம் அப்பகுதியில் சிவில் விமானங்கள் பறக்க முடியாது. ராணுவ சோதனைகள், நடவடிக்கைகள், ஆபத்து காலங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பாக்., உடனான முந்தைய பதட்டங்களின்போதும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

News December 18, 2025

ஏவுகணை சோதனைக்கு தயாராகிறதா இந்தியா?

image

இந்திய பாதுகாப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் AAI, டிச.22-டிச.24 வரை வங்கக்கடல் பகுதியில் NOTAM (குறிப்பிட்ட பகுதியில் சிவில் விமான போக்குவரத்துக்கு தடை) எச்சரிக்கை விடுத்துள்ளது. விசாகப்பட்டினம் அருகே, வங்கக்கடல் பகுதியில் சுமார் 3,240 கிமீ தூரத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மிகப்பெரிய ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!