News April 27, 2024
மக்கள் மடிவதை அரசு வேடிக்கை பார்க்கிறது

கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோவதைத் தமிழக அரசு வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மக்கள் மீது அக்கறை இல்லாமல் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பெற்று மக்களைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News August 26, 2025
புதிய வருமான வரி விதிகள்… டிசம்பரில் முக்கிய அறிவிப்பு

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.,12-ம் தேதி புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர இந்த மசோதா வழிவகுத்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் பல அம்சங்களும் இதில் உள்ளதாம்.
News August 26, 2025
SKவின் ‘அமரன்’ படத்துக்கு கேரளாவில் விருது

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில், ‘அமரன்’ ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றுள்ளது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு, கேரள அமைச்சர் வாசவன் விருது வழங்கி கெளரவித்தார். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தழுவி எடுக்கப்பட்டது.
News August 26, 2025
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன். *நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்; நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி. *ECG வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.